எத்தனை மருத்துவம் பார்த்தாலும் எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் வயிற்று பிரச்சனைகளும் ஜீரண கோளாறுகளும் தீராமல் இருக்கும். எக்ஸ்ரே... ஸ்கேன்... எண்டோஸ்கோபி..பிளட் டெஸ்ட்...யூரின் டெஸ்ட் என்று எந்த டெஸ்ட் எடுத்தாலும் நார்மலாக இருக்கும் எதிலும் வயிற்று பிரச்சனைக்கான காரணம் என்று தெரியாது.
பல இடங்களில் பாதிக்கப்பட்டவர் பொய் சொல்கிறார் என்று கூட குடும்பத்தினர் நினைக்கும் சூழ்நிலை இருக்கும்.
உண்மையில் இப்படி பாதிக்கப்பட்டவர்கள் ஹெர்பல் டாக்ஸிகாலஜி எனப்படும் தாவர நச்சுக்களால் பாதிக்கப்பட்டிருப்பார்.
தாவர நச்சுக்கள் என்பது பொதுவாக இடுமருந்து செய்வினை... மருந்துவைத்தல்.. கைமருந்து என்று பல பெயர்களில் மிகைபடுத்தி தவறாக சொல்லப்பட்டாலும் உண்மையில் இவை நச்சு தன்மை வாய்ந்த மூலிகைகளை உட் கொள்வதால் ஏற்படும் உடல் பாதிப்பாகும்.
பொதுவாக நீண்ட நாட்களாக நோயினால் அவதிப்படுபவர்கள் மருத்துவ சிகிசைகள் பயனளிக்காத சுழ்நிலையில் தங்களுக்கு யாரோ மருந்து வைத்துவிட்டார்கள் என்று சொல்வதை பல சந்தர்ப்பங்களில் நாம் கேட்டிருக்கிறோம்.
அதேசமயம் மருந்து வைத்து ஒருவரின் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தமுடியுமா என்றும் இடுமருந்தால் தீராத நோய்களை உருவாக்க முடியுமா என்ற சந்தேகமும் நிறைய பேருக்கு இருக்கிறது...
இடுமருந்து அல்லது மருந்து வைப்பது என்பது நடைமுறையில் உண்மையானது தானா என்றும் அபரிமிதமான அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த காலத்தில் இடுமருந்து செய்வினை போன்றவை எல்லாம் சாத்தியம் தானா என்றும் நிறைய பேர் கேட்கின்றனர்.
உண்மையில் ஹெர்பல் டாக்ஸிகாலஜி எனப்படும் தாவர நஞ்சியலை பற்றி தெரிந்தவர்களுக்கு இப்படி ஒரு கேள்வியே வராது.
இதில் மந்திரமோ...அமானுஷ்யமோ ... தெய்வதன்மையோ மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமோ எதுவும் இல்லை. விஷதன்மை வாய்ந்த தாவரநச்சுக்களை தெரிந்தோ தெரியாமலே உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் மட்டுமே.
இவை அனைத்தும் நச்சுத்தய்மையால் ஏற்படும் சாதாரண ஸ்லோ பாய்ஸன் ரக பாதிப்புகள் தான்.
தவறான மூலிகைகள் மூன்று வழிகளில் உடலுக்குள் செல்கிறது. ஒன்று...வேண்டுமென்றே உணவில் கலந்து கொடுக்கப்படுவது. இரண்டு...முறையாக மூலிகைகளை பற்றி தெரியாதவர்களிடம் தவறான மூலிகைகளை தவறான அளவில் வாங்கி உட்கொள்வது.... மூன்று. சரியாக சுத்தம் செய்யப்படாத கீரைகள்..பச்சிலைகள் இவற்றுடன் கலந்த நச்சு தாவரங்களை தவறுதலாக உட்கொள்வது.
இத்தகைய பாதிப்புகளுக்கு ஆன்மீக நம்பிக்கைகள் ஒரு காரணமல்ல. கடவுளை நம்புபவர்கள் நம்பாதவர்கள் என யாரையும் இந்த நச்சுக்கள் பாதிக்கும். அரளிவிதையை அரைத்து தின்றால் ஆன்மீக வாதிக்கும் இறப்பு ஏற்படும் பகுத்தறிவுவாதிக்கும் இறப்பு ஏற்படும். கஞ்சா புகையை சுவாசித்தால் கடவுளை நம்புபவனுக்கும் புத்தி பேதலிக்கும் கடவுளை நம்பாதவனுக்கும் புத்தி பேதலிக்கும்.
அது போலத்தான் இந்த நச்சு தாவரங்களும் தெரிந்தோ தெரியாமலோ உண்பவர்கள் அனைவருக்கும் இவை பாதிப்புகளை ஏற்படுத்தும்,
இயற்கை தாவரங்களில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருப்பதை போலவே விஷத்தன்மை வாய்ந்த நச்சு தாவரங்களும் நிறைய உள்ளன. உதாரணமாக அரளி விதையை தின்றால் உயிர் போகும் என்பதும்..ஊமத்தை விதையை தின்றால் மூளை பாதிப்பு ஏற்படும் என்பதும் சாதாரண கிராமத்து மக்களுக்கு கூட தெரியும்.
புகையிலை, கஞ்சா, அபின் போன்றவை உளவெறியூட்டும் போதையை தரும் தாவரங்கள் என்பதும். கள்ளிசெடி.ஊமத்தை செடி, பார்தீனியம் ஆகியவை மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்றும் நடைமுறையில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அதேபோல உடல் பாதிப்பை ஏற்படுத்தும் நூற்றுக்கணக்கன தாவரங்கள் உள்ளன.
இத்தகைய நச்சு தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துக்களை தெரிந்தோ தெரியாமலே உட்கொள்ளும் போது அவற்றின் நச்சுத்தன்மை உடலுக்கு பல் வேறு பாதிப்புகளை உருவாக்குகின்றன
.
உதாரணமாக குன்றிமணியில் உள்ள ஆப்ரின் விஷமும், இசப்பு கோல்விதையில் உள்ள ரைசின் விஷமும் வயிற்றில் இருக்கும் காஸ்ட்ரிக் ஆஸிட் எனப்படும் ஜீரண அமிலங்களின் திட தன்மையை அதிகபடுத்திவிடும். இதனால் தீராத ஜீரண பிரச்சனை ஏற்படும். குறைவான அளவு உணவு உட்கொண்டால் கூட வயிறு நிறைந்துவிட்டது போல தெரியும். உடல் திரவமான ஜீரண அமிலம் கெட்டியாவதை ஸ்கேன் எண்டோஸ்கோபி போன்றவற்றால் கண்டு பிடிக்க முடியாது.
அரளி மற்றும் கள்ளி மந்தாரையிலுள்ள தெவெற்றியா A விஷம் குடலில் ஓட்டையை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் குடலில் புண்கள் ஏற்பட்டு அல்சர் உருவாகும் மேலும் ஜீரண அமிலங்களில் காரதன்மை உருவாகி குடல் முழுவது சூடு அதிகமாகி குடல் எரிவு எனப்படும் இன்பிளமேட்டரி பவுல் டிஸீஸ் என்ற நோயை உருவாக்கும்.
ஆடைஒட்டி உரோம வேங்கையிலுள்ள அம்ப்ரோசின் விஷம் வாயு தொல்லையையும் ஹப்பர் அசிடிடி, அஸிட் ரிஃப்ளக்ஸ் போன்ற தொல்லைகளையும் ஏற்படுத்தும். உணவு குழாயின் முகடு எனப்படும் esophagus தடுப்பை பலவீன படுத்தி அதன் இயல்பான இயக்கத்தை குறைத்துவிடும். தொடர்ந்து ஏற்படும் ஆஸிட் ரிஃப்ளக்ஸ் தொண்டையில் கோழைகட்ட செய்யும்.
நச்சு தன்மையுள்ள தாவரங்களல் தயாராக்கப்பட்ட மருந்துக்களை உட்கொள்ளும் போது அதிலுள்ள நச்சுகள் காஸ்ட்ரிக் ஆஸிட் எனப்படும் ஜீரண அமிலங்கள் மற்றும் ஜீரண என்சைம்களின் சரிவிகிதத்தையும் அடர்த்தியையும் பாதிக்கின்றன. அதோடு பெரும்பாலான மருந்துகள் இரைப்பை அமிலத்தை குறைத்துவிடுகிறது அல்லது இல்லாமல் செய்து ஹைபோகுளோரிகாண்ட்ரியா என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் ஜீரண அமிலங்கள் மற்றும் ஜீரண உறுப்புக்களின் இயல்பான இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
இதனால் தான் இடுமருந்து பிரச்சனை இருப்பவர்களுக்கு தீராத வயிற்றுவலி, பசியின்மை, வயிற்றில் குத்தல் , மலசிக்கல், எப்போதும் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வு ஆகிய பாதிப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.
தொண்ணூறு சதவீத தாவர நச்சுக்கள் மணமும் சுவையும் அற்றதாக இருப்பதால் உணவில் கலக்கும் போது எவ்வித மாற்றமும் தெரிவதில்லை.
அதுமட்டுமல்லாமல் இத்தகைய விஷ மருந்துக்கள் ஒரு முறை உடலுக்குள் செலுத்தப்பட்டால் நீண்டகாலத்திற்கு உடலில் தங்கி இருக்கும். சாதாரணமாக உட்கொள்ளும் உணவு வகைளில் இருந்து தேவையான சக்தியை பெறுவதால் நச்சுதன்மை நீண்டநாட்களுக்கு உடலில் தேங்கி இருக்கிறது. உதாரணமாக
தாவர நச்சுக்கள் உடலில் இருக்கும் போது பழைய உணவுகளை அதிகம் உட்கொண்டால் பழைய உணவுகளில் உள்ள பாஸில்லாய் என்ற பாக்டீரியாக்கள் உடலில் இருக்கும் நச்சுதன்மையை அதிக படுத்தும்.
சேனைகிழங்கு, சேப்பங்கிழங்கு, புளி,கேசரிபருப்பு,மது,பழைய அசைவ உணவுகள், கருவாடு,வாத்து முட்டை, புளித்த உணவுகள் ஆகியவை உடலிலுள்ள நச்சு தன்மையை நீங்காமல் இருக்க செய்யும் தன்மை கொண்டவை. இதனால்தான் ஒருமுறை கொடுக்கப்பட்ட விஷ உணவுகள் பல வருடங்கள் கூட உடலில் தங்கி பாதிப்புகளை தருகின்றன.
உடல் மற்றும் ஜீரண திரவங்கள் பாதிக்கப்படுவதால் வழக்கமாக செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகளால் உடலுக்குள் ஏற்பட்டிருக்கும் நச்சுபாதிப்புகளை பெரும்பாலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால் தான் ஸ்கேன், எக்ஸ்ரே,லேப் டெஸ்ட், என்டோஸ்கோப் போன்ற சோதனைகளில் எந்த குறையும் தெரியாத போதும் உடல் உபாதை மட்டும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
ஆனால் மருத்துவ பரிசோதனைகளால் தெரியாத பாதிப்புகளை உடலில் மாற்றங்களைக்கொண்டு அடையாளம் காணமுடியும்.
பொதுவாக நீண்ட நாட்களாக காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உடலில் நச்சுதன்மை இருக்கிறதா என்று அறிந்து கொள்வது நல்லது.
அதே போல் எந்தவகையான நோய் ஏற்பட்டிருந்தாலும் அதற்கான காரனங்கள் பரிசோதனைகளிலும் ஆய்வக சோதனைகளிலும் தெரியாத போது உடலின் நச்சுதன்மையை சோதித்து கொள்வது மிகமிக அவசியம்.
உடலுக்குள் தங்கி இருக்கும் தாவர நச்சுதன்மைக்கு தக்கவாறு பாதிப்புகள் இருக்கும். களுநஞ்சு குதம்ப நஞ்சு இரண்டும் சேர்ந்து இருந்தால் தீராத வாயு தொல்லை, ஜீரண கோளாறு, மேல்வயிற்றில் பாரமாக இருப்பது, அடிக்கடி ஏப்பம், பசியின்மை, வயிறு ஊதுவது போன்ற பாதிப்புகள் இருக்கும்.
குதம்ப நஞ்சும் சூலை நஞ்சும் சேர்ந்தால் வயிற்றிலும் ஜீரண மண்டலத்திலும் புண்கள் ஏற்படும். வயிற்றில் அமிலதன்மை அதிகரிக்க இந்த நச்சுகலவை மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
தாவர நஞ்சியலை (ஹெர்பல் டாக்ஸிகாலஜி) பொருத்தவரை நவீன கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னரே கருவூர்சித்தர், புலிப்பாணி சித்தர், சரகர் போன்றவர்கள் நிறையவே சொல்லி இருக்கின்றனர். இதில் அஷ்ட சித்து எனப்படும் களுநஞ்சு..களஞ்சிக நஞ்சு..பாணிக்கம்ப நஞ்சு சூலை நஞ்சு..பஞ்சவ நஞ்சு..குன்ம நஞ்சு..குதம்ப நஞ்சு..மண்டூக நஞ்சு என்ற எட்டு வகையான நஞ்சுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாக பழம்பெரும் மருத்துவ நூல்கள் சொல்லுகின்றன.
சதாரணமாக ஓடைகளின் அருகில் இருக்கும் நீர் சிலும்பை, செங்கழுனீர், மயிர்பாசி ஆகியவற்றில் இருக்கும் பஞ்சவ நஞ்சு குடலின் செயல்பாடுகளை கட்டுபடுத்தும் இயக்க நரம்புகளை அதிகமாக தூண்டுவதால் இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் மற்றும் அமீபியாஸிஸ் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது.
பெரும்பாலான குறிசொல்பவர்கள்..சாமியார்கள்.ஆகியோர் காதல் வெற்றிபெறவும் கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும் கொடுக்கும் வசிய மருந்தில் மதனகாம பூவுடன் காட்டு கருவேலமுள் பயன் படுத்தப்படுகிறது.இதிலுள்ள பஞ்சவ நஞ்சு ஈரல் வீக்கத்தையும் பைல் பிக்மென்ட் எனப்படும் ஈரல் நிணநீரின் சம சீரின்மையையும் ஏற்படுத்தும்.
சில வகை தாவர நச்சுக்கள் உடலுறவின் மூலம் பரவக்கூடியதாகவும் இருக்கின்றன.குறிப்பாக பஞ்சவ நஞ்சு எனப்படும் இரண்டாம் நிலை விஷங்கள் உட்கொள்பவரின் ஈரல் மற்றும் பைல் பிக்மெண்ட்ஸ் எனப்படும் நிணநீரில் நச்சு தன்மையை ஏற்படுத்துகின்றன. இது உடல் உறவின் மூலம் பரவக்கூடியது. குறிப்பாக இத்தகைய விஷங்கள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மூலம் மிக எளிதாக அவர்களோடு உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கும் பரவும்.ஆரம்பத்தில் பசியின்மை, வாய்கசப்பு, மேல் வயிற்றில் வீக்கம், அஜீரணம், ஜீரண அமிலம் மேல் நோக்கி வருவது போன்றவற்றில் துவங்கி ஈரல் வீக்கம், மஞ்சள் காமாலை வரை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தீர்வுகள்.....
இடுமருந்து மூலமாக பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை நீக்குவதே முறையான தீர்வாகும். பூஜைகள், வழிபாடுகள், யந்திரங்கள் ஆகியவற்றின் மூலமாக உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவே முடியாது.
அதேபோல மருந்து எடுப்பதாக சொல்லிக்கொண்டு குழல் வைத்து ஊதுவது, வாந்தி எடுக்க செய்வது போன்றவை சாத்தியம் இல்லை.
இடுமருந்து பாதிப்பு இருப்பவர்கள் முதலில் தங்களுக்கு உண்மையிலேயே உடலில் நச்சுத்தன்மை இருக்கிறதா என்று உமிழ் நீர் சோதனை மற்றும் ரத்த சோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். உடல் நாடி பரிசோதனை மூலமாகவும் நச்சுதன்மை இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
அதன் பின்னர் முதலில் உடலில் தங்கியுள்ள நச்சுதன்மையயை நீக்கும் ஆண்டி டாக்ஸின் . . . டி டாக்ஸின் மருந்துக்களை உட்கொள்ள வேண்டும்.
இடுமருந்து பிரச்சனையோ செய்வினை பிரச்சனையோ இருக்கிறது என்றால் அவை விஷமூலிகைகளால் ஏற்படுத்தப்பட்ட தாவர நச்சுபாதிப்புகள் தான் என்பதை தெளிவாக உணர வேண்டும்.
அத்தகைய நச்சுக்களை நீக்க ஆண்டி டாக்ஸின் எனப்படும் நச்சு முறிவு சிகிச்சைதான் ஒரே வழி என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதே போல இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால் முழுவதும் குனமாகின்ற வரை சிகிச்சை எடுக்கும் பொருமை வேண்டும்.
ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு .... .... .....